தமிழ்க்கதிர் சங்கமம் மற்றும் தமிழ்க்கதிர் பதிப்பகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
நிகழ்ச்சி 16-3-2025 (ஞாயிற்றுக்கிழமை ) கோவை ராம்நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
கோவை தமிழ்க்கதிர் சங்கமம் நிறுவனர் மா.கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
மண்வளம் காப்போம், பாரத மண்ணை காப்போம், எதிர்கால பாரதம், பாரதம் 2025, பாரதத்தின் நேசம், இயற்கை தேசம் ஆகிய
6 கவிதை தொகுப்புகள் உள்ளடங்கிய பாரத மண்ணே நீ வாழ்க' என்ற நூல்வெளியிடப்பட்டது.
கவிஞர்கள் எழுதிய இந்த கவிதை நூலை மதுரை மாநில அரசு சிறந்த பொழிபெயர்ப்பாளர் விருதாளர் மற்றும்
சிறந்த பதிப்பாளர் விருதாளர் செ. ராஜேஸ்வரி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து,
இந்நிகழ்விற்கு வந்திருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. உமாசங்கரி, மன நல ஆலோசகர் அகிலா, ஜே.பார்வதி,
சம்சூல் ஹூதா பானு, புவியியலார் சபாரத்தினம், திரைப்பட இயக்குனர் மிருத்திகா சந்தோஷினி,
நித்யா அழகிரி, உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.